சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. ஹோம் குவாரண்டைன் திட்டம் ரத்து இல்லை.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் அறிவிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களில் பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக வளர்வதால் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? வெளியானது பரிந்துரை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? வெளியானது பரிந்துரை

ஆணையர் பிரகாஷ்

ஆணையர் பிரகாஷ்

அந்த வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில்., சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது,

10 நாட்கள் தனிமை

10 நாட்கள் தனிமை

வீட்டில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியானது. மேலும் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்தது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

யாருக்கு ரத்து செய்யப்படும்

யாருக்கு ரத்து செய்யப்படும்

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் கருத்து குறித்து 'ஒன் இந்தியா' தமிழ் சார்பில் நாம் சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பேசிய போது, "சென்னையில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு வருபவர்களில் 15 சதவீதம் அதை முறையாக கடைபிடிக்காமல் சுற்றுகிறார்கள். அப்போது அவரிடம் ஹோம் குவாரண்டைனை கேன்சல் செய்யலாமா என்று கேட்டபோது , அவர் சொன்ன அர்த்தம் என்பது வீட்டு தனிமைப்படுத்துதலை முறையாக கடைபிடிக்காத 15 சதவீதம் பேருக்கத்தான் ஹோம் குவாரண்டைன் ரத்து செய்யப்படும் என்றார்.

Recommended Video

    கொரோனாவுக்கு ரஷ்யா அனுமதி கொடுத்த தடுப்பு மருந்து
     ஹோம் குவாரண்டைன் வசதி

    ஹோம் குவாரண்டைன் வசதி

    ஆனால் அவர் சொன்ன அர்த்தம் அப்படியே மாற்றி கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ளேன். குவாரண்டைனுக்கு மருத்துவமனைக்கு செல்பவர்கள் மருத்துவனை செல்லலாம். கோவிட் கேர் சென்டருக்கு செல்ல விரும்புவர்கள் செல்லலாம். கொரோனா நோய் பாதிப்பு அதிகம் இல்லாமல் , தனி கழிப்பறை வசதி உள்ளவர்களுக்கும் ஹோம் குவாரண்டைன் வசதி உண்டு. ஆனால் ஹோம் குவாரண்டைன் விதிமுறையை சரியாக கடைபிடிக்காதவர்கள் மட்டுமே குவாரண்டைன் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்றார்.

    English summary
    Chennai Corporation decides to move all the contacts of a Corona patient to Covid Care Center Also, if you take all family members to a Covid Care Center with so many +ve patients, everyone will def get it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X