சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

களத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் சென்னை மாநகாட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ திட்டம்- Gagandeep Singh Bedi-க்கு குவியும் பாராட்டு

    சென்னை மகாராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது முதலே அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் சென்னை மாநகாட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு விருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது வைரஸ் பாதிப்புகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகராகத் தலைநகர் சென்னை இருந்தது. அதேபோல தினசரி வைரஸ் பாதிப்புகளும் ஐந்தாயிரத்திற்கும் மேல் சென்றது. கொரோன 2ஆம் அலை உச்சத்தில் இருந்த போது கடந்த மே மாதம் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.

    பலகட்ட நடவடிக்கை

    பலகட்ட நடவடிக்கை

    சென்னை ஆணையராகப் பதவியேற்றவுடனேயே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அவர் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்குப் பரிசோதனை முடிவு தெரியும் முன் மருத்துவ கிட்டை வழங்குவது. சென்னையில் கொரோனா படுக்கைகளை அதிகரித்தது எனப் பலகட்ட நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக, அவர் அறிமுகம் செய்த ஆக்சிஜன் வசதி கொண்ட கார் ஆம்புலன்ஸ் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார்.

    குறைந்த கொரோனா

    குறைந்த கொரோனா

    இப்படி சென்னை மாநாகாரட்சி எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வந்துவிட்டது. ஐந்தாயிரத்திற்கும் மேல் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 2000க்கும் கீழாக குறைந்துள்ளது. இந்நிலையில், வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தைச் சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

    புதிய திட்டம்

    புதிய திட்டம்

    கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரையும் விட மோசமாகப் பாதிக்கப்பட்டது யார் எனப் பார்த்தால் அது சாலையில் வசிக்கும் வீடற்றோர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் தான். பொதுவாக இவர்களுக்குத் தினசரி அப்பகுதியில் சென்று வரும் சாமானியர்களே உதவுவார்கள். கொரோனா ஊரடங்கால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டதால், வீடற்றவர்கள் ஒரு வேளை உணவுக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

    வீடற்றோருக்கு உதவும் திட்டம்

    வீடற்றோருக்கு உதவும் திட்டம்

    இந்நிலையில், வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் 'அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்' என்ற திட்டத்தைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதற்காகச் சிறப்பு வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு உதவ முடியும்.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    இந்தத் திட்டத்தை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அமைச்சர்கள் கே என் நேரு, மா சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதற்கட்டமாக இத்திட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்க ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலை மக்களுக்கும் உதவும் வகையில் சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Chennai Corporation's new plan to help mentally challenged people. Gagandeep Singh Bedi new action will help homeless people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X