சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உசுரு முக்கியம்.. கடலையை அப்பறம் போடலாம்.. மெரீனா பீச், எலியட்ஸ் பீச்சை இழுத்து மூட உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா எதிரொலியாக மக்கள் அதிகம் கூடும் இடமான கடற்கரைகள் சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 275 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 Chennai Corporation says that beaches in chennai are closed

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பூங்காக்கள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன. மேலும் சென்னையில் உள்ள பொழுது போக்கு அம்சங்களும் மூடப்பட்டன.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் யாரும் சுற்றுலா மூடுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மாஸ் கேதரிங்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் எதிரொலி.. புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.. உச்சகட்ட அலர்ட்!கொரோனா வைரஸ் எதிரொலி.. புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.. உச்சகட்ட அலர்ட்!

இன்று பிற்பகல் 3 மணிக்கு முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த கடற்கரைகள் மூடப்படும் என்றும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
All the beaches in Chennai are closed from today till further order comes, says Corporation Administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X