சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காய்ச்சலா.. இருமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சி ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு என எந்தவிதமான அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய இலவச ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது.

இதற்காக சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் சிறப்பு பரிசோதனை மையங்களை அது ஏற்படுத்தி வைத்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் எந்த ஒரு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டும் கொடுக்காமல், பொதுமக்கள் நேரடியாக இங்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

Chennai corporation sets up testing centres in Chennai

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, வாசனையை நுகர முடியாமல் போவது, சுவை தெரியாமல் போவது என எந்த விதமான அறிகுறியை உணர்ந்தாலும் உடனடியாக இங்கு வந்து சோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai corporation sets up testing centres in Chennai

இந்த பரிசோதனை மையங்களில் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகர மக்கள் தயவு செய்து இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்கூட்டியே நோயை கண்டறிந்து விட்டால் பல்வேறு சிரமங்களையும் தவிர்க்க முடியும் என்பதால் பொதுமக்கள் இதை சரிவர பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!

இதேபோல சென்னை மாநகராட்சி முழுவதிலும் காய்ச்சல் முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்தி கொரோனா கட்டுப்பாட்டுக்கு உதவ வேண்டும் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
People can walk in to a Chennai Corporation static swab collection centre. No prescription is needed for the test. Corporation has set up these centres in all its 15 Zones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X