சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 45 ஆயிரம் தெருக்களில் சூப்பர் முயற்சி.. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முடிக்க திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தெருக்களில் உறைகிணறுகள் அமைத்து மழைநீரை சேமிக்கும் திட்டத்திற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் கடுமையாக சரிந்து போன நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வீடுகளில் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.அத்துடன் அனைத்து அரசு கட்டடங்களிலும் மழை நீரை சேமிக்கும் வசதியை அமைத்து வருகிறது.

chennai corporation super try for rain water harvesting in streets

இந்நிலையில் சென்னையில் தெருக்களில் உறை கிணறுகள் அமைக்கும் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்தை எதிர்கால தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை! முக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை!

இதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 45 ஆயிரம் தெருக்களில், தேங்கும் மழைநீரை உறைகிணறுகள் அமைத்து நிலத்தடியில் நீரை சேமிக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பான பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

English summary
chennai corporation super try for rain water harvesting in streets, officials decide to build rain water saving wells in 45 thousands streets at chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X