சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்கிங்.. சென்னையின் பிரபல ஹோட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள்.. அதிகாரிகள் பறிமுதல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையின் பிரபல ஹோட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள்

    சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தமிழகத்தில் ஜனவரி 1 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசால் தடை விதிக்கபட்டுள்ளது. அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்போர் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தபட்டிருந்தனா்.

    Chennai corporation team inspects a famous hotel in chennai and seized 3 ton plastic materials

    குறிப்பாக வணிக வளாகங்கள் பெரிய நிறுவனங்களில் அதிகபடியாக பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் அதை கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டிருந்தனா். மேலும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    அதன் ஒரு பகுதியாக இன்று திருவிக நகர் 6வது மண்டலம் சார்பில் மத்திய மண்டல அதிகாரி ஆனந்த்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியா்கள் சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கடைகளை சோதனை செய்தனர்.

    Chennai corporation team inspects a famous hotel in chennai and seized 3 ton plastic materials

    அந்த பகுதியில் இருந்த பிரபல ஓட்டலில் சோதனை மேற்கொண்ட பொழுது 3 டன் எடை கொண்ட உணவு அருந்தும் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் குடிநீர் கிளாஸ், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை கைப்பற்றினர்.

    பின்பு அருகிலிருந்த மற்ற தனியார் உணவங்களிலிருந்தும் சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஸ்பெக்டரம் மாலில் உள்ள பிரபல வணிக நிறுவனத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai corporation officials raided a famous hotel and seized 3 ton plastic materials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X