சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கள்ளக்காதல்.. மனைவி இடையூறு.. தலையணையால் அழுத்திக் கொன்ற கணவர்.. ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த தீயணைப்பு வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், சென்னையில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி சரண்யா, மகள் ஷிவானியுடன் கொண்டித்தோப்பில் உள்ள தீயணைப்புத்துறை குடியிருப்பில் வசித்து வந்தனர்.

chennai court convicts husband for murdering his wife

செந்தில்குமாருக்கும், அவரது உறவுக்கார பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்ததால், சரண்யாவுக்கும், செந்தில்குமாருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் மனைவியை, தலையணையால் அழுத்தி கொலை செய்தார், செந்தில்குமார்.

பெண்களுக்கேற்ற தண்ணீர் கேன் தேவை.. வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஹைகோர்ட்பெண்களுக்கேற்ற தண்ணீர் கேன் தேவை.. வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஹைகோர்ட்

கடந்த 2015 நவம்பர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏழுகிணறு போலீசார், செந்தில்குமாரை கைது செய்தனர். இநு்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, தீயணைப்பு வீரர் செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

English summary
Chenna woman's' court has convicted a fire department staff for murdering his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X