• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பலாத்காரம்.. பெண்களை மட்டுல்ல, ஆண்களையும் விட்டு வைக்காத கொடுமை.. எங்கே போகுது சமூகம்?

Google Oneindia Tamil News

சென்னை: இளம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கூட, பாதுகாப்பு இல்லாத இடமாக இந்த உலகம் மாறி வருகிறது.

தமிழகத்திலும் அப்படியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுவும், தமிழக தலைநகரான சென்னையில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

கொதித்தெழுந்த மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்யும் அளவுக்கு சென்னை, மதுரவாயல் பகுதியை பரபரப்பாக்கியுள்ளது இந்த பாலியல் கொடுமை சம்பவம். தமிழகம் மட்டுமல்ல, நமது நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற அநியாயங்கள் அரங்கேறி வருகிறது.

குஜராத்: ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-சிக்கிய சென்னை சுதாகர்- அதானி குழுமம் விளக்கம்குஜராத்: ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-சிக்கிய சென்னை சுதாகர்- அதானி குழுமம் விளக்கம்

மதுரவாயல் சம்பவம்

மதுரவாயல் சம்பவம்

சம்பவம் தொடர்பான விவரம் இதுதான். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுவன். திடீரென அவரை காணவில்லை, வீட்டுக்கு வரவில்லை என்று, அவரது பெற்றோர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையறிந்த போலீசார், அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தாக்கிய 17 வயது சிறுவன்

தாக்கிய 17 வயது சிறுவன்

சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன்தான், இந்த 9 வயது சிறுவனை தாக்கியது தெரியவந்தது. அதன் பின்னணி குறித்து கேட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 17 வயது சிறுவன், இந்த 9 வயது சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு இணங்க அழைத்தாராம். பாலியல் சேட்டை செய்தாராம். அதிர்ச்சியடைந்த இந்த சிறுவன், அதற்கு மறுத்ததால், கோபத்தில் அந்த 17 வயது சிறுவன், இவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு தாக்கி விட்டு சென்றுள்ளார்.

ஆந்திரா சம்பவம்

ஆந்திரா சம்பவம்

இப்படித்தான், கடந்த மார்ச் மாதம், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடேப்பள்ளி மண்டலத்தில் உள்ள மெல்லம்புடி மற்றும் வடேஸ்வரம் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் ஒரு மாத இடைவெளியில் காணாமல் போய், பிறகு சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில், கோபய்யா என்ற கோபி என்ற 19 வயது வாலிபர் இந்த சிறுவர்களை கை, கால்களை கட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு விட்டு, கொலை செய்த பகீர் சம்பவம் தெரியவந்தது. இந்த சைக்கோ கொலைகாரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 விழுப்புரம் கொலை

விழுப்புரம் கொலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், கடந்த வருடம், அக்டோபர் மாதம், அதே ஊரைச் சேர்ந்த இளைஞரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விசாரணையின்போது ஓரினச் சேர்க்கைக்கு சிறுவன் மறுத்ததால், கொலை செய்ததாக வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.

உத்தர பிரதேசத்தில் தந்தை

உத்தர பிரதேசத்தில் தந்தை

தமிழ்நாடு, ஆந்திரா, மட்டுல்ல, உத்தர பிரதேசத்திலும் இப்படி ஒரு சம்பவம், கடந்த வாரம் நடைபெற்றது. உத்தர பிரதேச மாநிலம், கதொலி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆண் சடலம் ஒன்றை போலிஸார் கண்டெடுத்தனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வந்ததில் அது ரெஷ்பால் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மகன், சுமித் குமார் கைது செய்யப்பட்டார். தனது தந்தை ஒரு ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக சுமித் குமார் வாக்குமூலம் அளித்தார்.

English summary
Homo sex in Chennai: This world is becoming a place of insecurity not only for young women but also for men, boys and girls. Such injustices are taking place in Tamil Nadu and many parts of our country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X