சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ப்ரையன்' ஆக மாறி முடங்கி போன குஷ்பு கணக்கு.. முடக்கியது யாரு.. ட்விட்டருக்கு சென்னை போலீஸ் லெட்டர்

Google Oneindia Tamil News

சென்னை : குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு 'ப்ரையன்' என்று பெயர் மாற்றப்பட்டது. அவரது புகைப்படங்கள் அடங்கிய ஏராளமான ட்வீட்கள் அழிக்கப்பட்டதுடன் அவரது கணக்கில் இருந்து சில பதிவுகளும் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதி உள்ளது.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

நடிகை குஷ்பு ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருபவர். தினசரி அவரது கணக்கில் இருந்து பதிவுகள் வரும். அரசியல் தொடர்பாக, சினிமா தொடர்பாக பல்வேறு கருத்துககளை வெளியிட்டு வந்தார். அவரது பழைய ட்வீட்கள் பல ஆளும் பாஜக அரசையும். இப்போதைய ட்விட்கள் எதிர்க்கட்சியான காங்கிரஸையும் , திமுகவையும் விமர்சித்து இருந்தன.

குஷ்பு கணக்கு

குஷ்பு கணக்கு

இந்த நிலையில் அண்மையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட்டது. அந்த கணக்க 'ப்ரையன்' என்கிற பெயருக்கு மாற்றப்பட்டது. மேலும் பல்வேறு தேவையற்ற ட்வீட்கள் அவரது கணக்கிலிருந்து தொடர்ச்சியாக வந்தன.

 குஷ்பு கவலை

குஷ்பு கவலை

குஷ்பு ட்விட்டர் கணக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத அளவிற்கு அவரது ட்வீட்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டிருந்தன. குஷ்புவால் மீண்டும் கணக்கில் நுழைய முடியாத அளவிற்கு பாஸ்வேர்டுகள் மாற்றி ஹேக்கர்கள் அட்டூழியம் செய்துவிட்டார்கள்

குஷ்பு புகார்

குஷ்பு புகார்

இதையடுத்து ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஜிபிசைலேந்திர பாபுவை சந்தித்து குஷ்பு முறையிட்டார். இதேபோல் ம் சைபர் கிரைமிலும் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சைபர் கிரைமுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

ட்விட்டருக்கு கடிதம்

ட்விட்டருக்கு கடிதம்

இதையடுத்து குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதி உள்ளது. இதனிடையே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தை பழையபடி மீட்டெடுத்துவிட்டார்.

கடும் விவாதம்

கடும் விவாதம்

பிரதமர் மோடி தானே குடையை பிடித்த படி பேட்டி கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டதுடன், அந்த புகைப்படத்துடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கு மற்றவர்கள் குடை பிடிக்கும் புகைப்படத்தையும் கடந்த 20ம் தேதி பகிர்ந்தார். இந்த ட்வீட் வைரலானது. ஆனால் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.

English summary
Chennai Cyber Crime polices start enquery about Khushboo Twitter account hacked case. police letter to twitter India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X