சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை தினம்: 380 | இது நம்ம சென்னை ! | Chennai day

    சென்னை: ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமாகிய முகவரி என்பது அதன் மொழி தான். ஆனால் இப்போது சென்னையில் சென்னை தமிழ் இயல்பை இழந்துவருகிறது. தென்மாவட்ட மக்கள் மொத்தமாக வந்து குவிந்ததால் இப்போது சென்னை பாஷையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    எங்க ஊரு மெட்ராசு.. இதுக்கு நாங்க தானே அட்ரசு.. மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் சென்னை என்றதும் ஞாபகத்து வருகிறது. 2009ம்ஆண்டு இருந்த சென்னை 10 வருடங்களில் அப்படியே மாறிப்போய் விட்டது.

    இந்த 10 வருடங்களில் சென்னை மாநகரம் அடையாளத்தையே மாற்றிக்கொண்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் மெட்ரோ ரயில்கள் ஆக்கிரமித்து ஓடுகின்றன. வானுயர்ந்த அழகிய கட்டிடங்கள், ஆடம்பர நட்சத்திர மால்கள் என தோற்றம் மொத்தமும் அற்புதமாக மாறிக்கிடக்கிறது. இந்த மாற்றத்தோடு இங்கு காலம் காலமாக பேசப்பட்டு வந்த சென்னை தமிழும் மாறிக்கிடக்கிறது.

    அன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDayஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay

    இப்போது டீ என்கிறேன்

    இப்போது டீ என்கிறேன்

    பிற மாவட்ட மக்கள் இந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் வந்து குவிந்ததால் அதன் இயல்பை சென்னை தமிழ் மாறிக்கிடக்கிறது. 2009ல் நைனா ஒரு டீ போடேன்... என்று சொன்ன நிலையில் இப்போது 'சேட்டா ஒரு டீ' என்ற அளவுக்கு பிறமக்கள் குவிப்பால் மாறிக்கிடக்கிறது.

    மாறிப்போன தமிழ்

    மாறிப்போன தமிழ்

    முன்பு யார் சென்னை வந்தாலும் சென்னை பாஷையை கற்றுக்கொண்டு அதற்கு மாறிக்கொண்டு இருந்தார்கள். ஆனா இப்போது எல்லோரும் அவரவர் தமிழையும் சென்னை தமிழிசையும் மிக்ஸிங் செய்து பேசுகிறார்கள். எம்பபுட்டு நேரம் குந்திக்கிணே இருக்குறது. என்று மதுரைவாசிகள் சென்னைபாஷை பேசும் நிலையும், கோவைவாசிகள், இன்னா கண்ணு ஊட்டாண்ட உன்னை காணலயே என்று சொல்வது சாதாரணமாக மாறிவிட்டது.

    வையிராங்க

    வையிராங்க

    இதேபோல் 'என்னலே என்னபன்றவ பிறகு பாரும்' என்று பேசிய நெல்லை சீமை மக்கள் இங்குவந்து, 'இன்னா பன்ற, பிறகு பாரும்யா' என்று மாற்றி பேசுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரின் பாஷையிலும் சென்னை பாஷை ஒட்டிக்கொண்டுள்ளது. முன்பெல்லாம் மதுரை வார்த்தை 'வையிராங்க என்று கோவை பக்கமோ சென்னை பக்கமோ சொன்னால் வித்தியாசமாக பார்ப்பார்கள். இப்போது வையிராங்க என்பது சென்னையில் சர்வசாதாரணமாக பேசுகிறார்கள்.

    மாறிப்போன அம்மாக்கள்

    மாறிப்போன அம்மாக்கள்

    முன்பு பாத்துகினு நிக்கிற துன்னு.. என்று தெரு முனையில் இட்லி கடை வைத்திருக்கும் அம்மா தட்டில் இட்லியை வைத்து சர்வ சாதாரணமாக சொல்வார். இப்போது அப்படியே என்ன பார்த்துகிட்டே இருக்கே.. சாப்பிடுப்பா என்று மதுரை தமிழ் கேட்கிறது. இதேபோல் நெல்லை தமிழும், கோவை தமிழும் சர்வசாதாரணமாக கேட்கிறது

    அடித்தட்டு மக்களின் மொழி

    அடித்தட்டு மக்களின் மொழி

    சென்னை தமிழ் என்பது இங்குள்ள அடித்தட்டு மக்களின் செம்மொழியாகும். மற்ற மாவட்டங்களில் அந்தந்த மொழி அங்குள்ள ஆதிக்க மக்கள் பேசும் மொழி என்பதால் அப்படியே அங்கு இன்னும் நீடிக்கிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் மொழி என்பதால் என்னவோ இப்போது மெல்ல மெல்ல வங்ககடலில் இருந்து ஒதுங்கி வருகிறது இப்போது சென்னையின் கண்ணகி நகர் பகுதியிலும் வடசென்னை பகுதியிலும் ஒதுங்கி வருகிறது.

    English summary
    madras day special: beautiful chennai language changed with in 10 years after came south district people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X