India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? கூட்டணியான திமுகவை விளாசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்று செயல்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகரில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வீடுகளை சென்னை உயர் நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டது.

 ஈரோட்டில் நின்று சவால் விட்ட வாசன்.. ஈரோட்டில் நின்று சவால் விட்ட வாசன்..

இதையடுத்து வீடுகள் இடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீக்குளித்து தற்கொலை

தீக்குளித்து தற்கொலை

மேலும் வீடுகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் நேற்று தீக்குளித்தார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று பலியானார். இவரது இறப்புக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், போலீசுக்கு கண்டனம்

அதிகாரிகள், போலீசுக்கு கண்டனம்

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், தற்கொலை செய்த கண்ணையாவின் மனைவி சத்யாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகயைில், ‛‛இந்த பகுதியில் வசிக்கும் மக்களை அகதி மற்றும் அனாதை போல் நடத்தி உள்ளனர். நீர்நிலை என்பது புறம்போக்கு இடம் அல்ல. இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். அதிகாரிகள், போலீசாருக்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுவிட்டு தனி நபருக்காக மக்களை வெளியேற்றுகிறார்கள்.

அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?

அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு மக்களை வெளியேற்ற முடியும் என்றால் இங்கு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ரூ.10 லட்சம் அறிவித்தது போதுமானதல்ல. ரூ.50 லட்சம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இனி வீடுகள் இடிக்கப்பட்டால், கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபரின் குடியிருப்பில் மக்களை குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும்'' என்றார்.

ஓராண்டு சாதனை இதுதானா?

ஓராண்டு சாதனை இதுதானா?

இதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அந்தபகுதியை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண் ஒருவர் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அழுது புலம்பினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‛‛கோவிந்தசாமி காலனியில் சுமார் 60 ஆண்டு காலமாக குடியிருந்த மக்களை அராஜக போக்கில் அகற்றி, தற்போது அனைத்து மக்களும் தெருவில் நிற்கும் அவலநிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது. தனி நபருக்காக 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம்?. ஒரு வருடத்தில் திமுக அரசு என்ன சாதனையை செய்துள்ளது?. தமிழகத்தில் வாழ்கிற மக்கள் அகதிகளாக வாழ்கிற ஒரு நிலைமையை பார்க்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. உண்மையான முதல்வராக இருந்தால் ஆர்ஏபுரம் மக்களை நேரில் சந்திக்க வரவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

 சரியாக அணுகாத அரசு

சரியாக அணுகாத அரசு

மேலும், நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ இவ்வளவு காலமாக அனைத்து உரிமையும் இந்த பகுதி மக்களுக்கு கொடுத்துவிட்டு, தற்பொழுது எப்படி மக்கள் இருக்கும் இடத்தை இடிப்பார்கள்?. ஒரு வியாபரிக்கு பிரச்னையாக இருக்கிறது என்று இந்த இடத்தை இடிக்கின்றனர். முதல்வர் மாற்று இடம் கொடுத்தாலும் இந்த இடத்திற்கு என்ன குறைச்சல்? இந்த இடம் ஆக்கிரமிப்பே கிடையாது. நீதிமன்றம் நிறைய தீர்ப்பு கொடுக்கிறது. அதை அரசு செயல்படுத்தி இருக்கிறதா? தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை சரியாக அணுகவில்லை. அரசு தானே இந்த இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது. சாஸ்த்திரா பல்கலைக்கழகத்தின் நிலத்தை கோர்ட் உத்தரவு படி இடித்தார்களா? இங்கே கேட்க ஆட்கள் இல்லை என்று இடிக்கிறார்களா? பாதி நீதிமன்றங்கள் நீரில்தான் கட்டப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்த வியாபாரி நிலமும் கபாலீஸ்வரர் கோவில் நிலம் என்றுதான் தெரிவிக்கிறார்கள். இதை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு மாற்றாக பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் என்று கொடுப்பது ஏற்புடையது அல்ல. முதல்வர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

English summary
Chennai Raja Annamalaipuram Govindasamy nagar demolition row: PWD officials are taking bribes for demolition drive. What are the ministers doing in this matter?, e K Balakrishnan, Marxist Communist Secretary of State, raises question against his alliance DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X