சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன செய்வது?.. அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த டிஜிபி, கமிஷ்னர்.. வண்ணாரப்பேட்டை பற்றி ஆலோசனை! v

சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவுக்கு கொரோனா வைரஸ்.. இந்தியாவிற்கு குடியுரிமை சட்ட திருத்தம்.. நாஞ்சில் சம்பத் பொளேர் - வீடியோ

    சென்னை: சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்

    போலீசில் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.போலீஸ் தடியடியை கண்டித்து தமிழகம் முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கோவை, திருப்பூரில் போராட்டங்கள் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது . 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது.

    எப்படி போராட்டம்

    எப்படி போராட்டம்

    இந்த நிலையில் இதேபோல் போராட்டம் தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.நேற்றே தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. கோவை, திருப்பூர், சேலம் பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இஸ்லாமியர்கள் மட்டுமின்று இந்துக்களும் இந்த போராட்டத்தில் பெரிய அளவில் கலந்து கொண்டனர்.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இந்த நிலையில் இந்த போராட்டம் விரிவடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    அரசியல் ரீதியான

    அரசியல் ரீதியான

    இந்த போராட்டம் காரணமாக அரசியல் ரீதியான பிரச்சனை வரலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மெரினா புரட்சிக்கு இணையாக இதனால் போராட்டம் நடக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க பாதுகாப்பை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவே இன்று ஆலோசனை நடந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை 2 மணி நேரமாக ஆலோசானை நடந்து வருகிறது.

    English summary
    Chennai DGP and Commissioner discussed TN CM over Vannarapettai CAA protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X