சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஆதம்பாக்கம் சம்பவம் எதிரொலி.. உரிமம் இன்றி மகளிர் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமிரா- வீடியோ

    சென்னை: சென்னை ஆதம்பாக்கம் சம்பவ எதிரொலியாக உரிமம் இன்றி மகளிர் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை நகரில் பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வந்தது. இந்த விடுதியை திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிலையில் இந்த விடுதியின் குளியல் அறை, படுக்கை அறை, ஹேங்கர், பல்பு ஆகியவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

    புகாரின் பேரில் ஆய்வு நடத்திய போலீஸார் சஞ்சீவியை கைது செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அனுமதியின்றி விடுதி நடத்தினால் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    ஆட்சியர் அறிக்கை

    ஆட்சியர் அறிக்கை

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுவர் இல்லங்கள், மாணவியா், பணியாற்றும் பெண்களுக்கான விடுதிகள் நடத்துபவா்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்து அத்தாட்சி பெற்ற பின்னரே விடுதிகளை இயக்க வேண்டும். விடுதி நடத்துவோா் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவுச்சான்று, உரிமம் பெற வேண்டும். இது மட்டுமல்லாமல் விடுதி நடத்துவோா் தீயணைப்புத் துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளிடம் உரிய உாிமம் பெற வேண்டும்.

    தண்டனை

    தண்டனை

    அதே போன்று உரிய அதிகாாியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும். ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டடம் அமைக்க வேண்டும். பதிவுச்சான்று மற்றும் உரிமம் இன்றி விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இணையதளம்

    இணையதளம்

    விடுதி நடத்துவதற்கு ஆட்சியரிடம் பதிவு செவதற்கான சான்றிதழை அந்தந்த விடுதி அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும். பதிவு பெற்ற விடுதிகளின் பெயா்ப்பட்டியல் முகவரியோடு டிசம்பா் 31-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

    புகார் அளித்தல்

    புகார் அளித்தல்

    2019 ஜனவரி முதல் பதிவின்றி இயங்கும் எந்த விடுதியிலும் பெண்கள், குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம். பதிவின்றி இயங்கும் விடுதிகள் குறித்து 94448 41072 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகாா் அளிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai District Collector frames new guidelines for Working Women's hostel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X