சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இவர்களுக்கு மட்டும் தான் இனி பாஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மூன்று காரணங்களுக்கு மட்டும் தான் இனி இ பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    Chennai உட்பட 4 மாவட்டங்களில் மீண்டும் lockdown... அரசு அதிரடி அறிவிப்பு

    19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன்.. 10 நாட்களுக்கு வங்கிகளை மூட முதல் முறையாக உத்தரவு தமிழகத்தில் 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன்.. 10 நாட்களுக்கு வங்கிகளை மூட முதல் முறையாக உத்தரவு

    வாகன போக்குவரத்து

    வாகன போக்குவரத்து

    வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.

    யார் விண்ணப்பிக்கலாம்

    யார் விண்ணப்பிக்கலாம்

    சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக பிற காரணங்களுக்காவும் வெளிமாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் வழங்கப்பட்டு வந்தது. இனி மருத்துவ அவசர நிலை, திருமணம் மற்றும் மரணம் ஆகியவற்றுக்குத்தான் இபாஸ் வழங்கப்படும். அதற்கும் தகுந்த ஆவணங்களை இபாஸ் வலைதளத்தில் சமர்பிக்க வேண்டும். எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே இனி பாஸ் கிடைக்கும்.

    வெளிநாடுகளில்

    வெளிநாடுகளில்

    வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் அரசு கூறியுள்ளது.

    தமிழக அரசு உறுதி

    தமிழக அரசு உறுதி

    கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும் என்று அரசு கூறியுள்ளது.

    English summary
    The Government of Tamil Nadu has announced that E-Pass will be issued Applicants who submit relevant evidence from Chennai to other districts for marriage, medical and death
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X