சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

EZHUMBUR பெயர் மாற்றம்- 112வது பிறந்த நாளை கொண்டாடிய சென்னை எக்மோர் ரயில் நிலையம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தமது 112-வது நாளை வியாழன்று கொண்டாடியது. ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் எளியமுறையில் கேக்வெட்டி எழும்பூர் ரயில் நிலையத்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Recommended Video

    112வது பிறந்த நாளை கொண்டாடிய சென்னை எக்மோர் ரயில் நிலையம்

    1906-ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது சென்னை எழும்பூர் ரயில் நிலையம். 1908-ம் ஆண்டு ஜூன் 11-ல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் திறப்பு விழா கண்டது. தொடக்கத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள், 1 நடை மேம்பாலம் அமைக்கப்பட்டன.

    தற்போது மொத்தம் 11 நடைமேடைகள் உள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையமானது தமிழகத்தின் தென்மாவட்டங்களை தலைநகரம் சென்னையுடன் இணைக்கும் முதன்மை நிலையமாகும். இதேபோல் கேரளாவையும் ரயில் மார்க்கமாக சென்னை பெருநகரத்துடன் இணைப்பதும் இந்த எழும்பூர்தான்.

    செம மூவ்.. தமிழகத்தில் திடீரென மாற்றப்பட்ட 1018 பகுதிகளின் பெயர்கள்.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்?செம மூவ்.. தமிழகத்தில் திடீரென மாற்றப்பட்ட 1018 பகுதிகளின் பெயர்கள்.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்?

    எழும்பூர் ரயில் நிலையம்

    எழும்பூர் ரயில் நிலையம்

    நாள் ஒன்றுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் 50க்கும் கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் எழும்பூர் வழியே செல்கின்றன. திருவிழா காலங்கள், விடுமுறை காலங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அப்படி அலைமோதும்.

    எழும்பூர் ரயில் நிலைய வரலாறு

    எழும்பூர் ரயில் நிலைய வரலாறு

    சிறப்பு வாய்ந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை கட்டி முடித்த பொறியாளரின் பெயர் ஹென்றி இர்வின். இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அன்று மேற்கொண்டவர் சாமிநாதபிள்ளை. 1908-ம் ஆண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை கட்டி முடிக்க ஆன மொத்த செலவும் ரூ17 லட்சம்.

    எழும்பூர்- EZHUMBUR

    எழும்பூர்- EZHUMBUR

    இந்த நிலையில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் Egmore என்பது இனி EZHUMBUR என அழைக்கப்படும். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழில் என்ன மாதிரி ஊரின் பெயர்களை உச்சரிக்கிறோமே அதற்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுத்துகள் இருக்க வேண்டும் என இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

    112-வது பிறந்த நாள்

    112-வது பிறந்த நாள்

    இந்த அரசாணை வெளியான மறுநாள்தான் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 112-வது பிறந்த நாள் எளிமையாக் கொண்டாடப்பட்டது. கொரோனா லாக்டவுன் காலாமாக இல்லாமல் இருந்திருந்தால் பெருமைமிகு சென்னை பெருநகரின் அடையாளமான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பிறந்த நாள் விழா பேரெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கும்.

    English summary
    112th Commissioning day of Chennai Egmore Railway Station commemorated.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X