மோடி அலுவலகமே.. நேரடியாக தலையிட்டுவிட்டதே! பறக்கும் ரயிலை.. சென்னை மெட்ரோவுடன் இணையுங்கள்.. உத்தரவு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (CMRL) சென்னை பறக்கும் ரயில் (MRTS) இணைப்பது தொடர்பான திட்டத்தை விரைவுபடுத்தும்படி ரயில்வே வாரியத்துக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை தென்னக ரயில்வே தாமதப்படுத்தி வந்த நிலையில் பறக்கும் ரயிலுக்கு தற்போது பிரதமர் அலுவலகமே முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மெட்ரோவுடன் பறக்கும் ரயில் இணைப்பு: பிரதமர் அலுவலகம் உத்தரவு
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், சென்னையின் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது முக்கிய அம்சமாக இருந்தது. இந்த திட்டத்தை தென்னக ரயில்வே தாமதப்படுத்தி வந்ததை பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்துக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் (CUMTA) அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்த திட்டப் பணியை விரைவுபடுத்தும்படி பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேயிடம் மூன்று கேள்விகளை எழுப்பியது. ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
ரயில்வே வாரியம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (CUMTA) கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2024 பிப்ரவரி மாதத்தில் இது தொடர்பான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் திட்ட அறிக்கையின்படி, பறக்கும் ரயில் சேவையின் ஒரு வருட இயக்கச் செலவு சுமார் ரூ.104 கோடி. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.50 கோடி மட்டுமே. இந்த இணைப்பு திட்டம் நீண்ட காலமாக தாமதமாகி வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் எதிர்பார்ப்பு
சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். முதல் நடவடிக்கையாக, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், 2026 ஆம் ஆண்டில் கட்டம்-2 மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும்.பயணிகள் மெட்ரோ ரயில்களில் இருந்து MTC பேருந்துகள், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் கட்டம்-1 வழித்தடங்களுக்கு தடையின்றி நொடிகளில் மாறலாம் . 23 இடங்களில் இந்த வசதி வர உள்ளது.
சர்வதேச நாடுகளில் மட்டும் உள்ள இந்த வசதி சென்னையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மையங்கள் 116.1 கிமீ கட்டம்-2 நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 2025 முதல் 2028 வரை இந்த மெட்ரோ பணிகள் நடக்கும்.
திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்ஆர்டிஎஸ் நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கிமீ மெட்ரோவில் இது போல ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கிமீ மெட்ரோ-4ல், கோடம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மையங்கள் அமைக்கப்படும். 44.6 கிமீ மெட்ரோ-5ல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தோ வில்லிவாக்கம் வாணுவம்பேட்டை, கீழ்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
கையில் எடுக்கும் மெட்ரோ: சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் இன்னும் சில மாதங்கள் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். முதல் நடவடிக்கையாக, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications