சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. மறுக்க முடியலை.. மகளின் கண்ணீர் வாக்குமூலம்

குடும்பமே தற்கொலை செய்தது குறித்து மகள் வாக்குமூலம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆவடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை: கடன் தொல்லையா?

    சென்னை: "விஷ சாப்பாட்டை அப்பா சாப்பிட சொன்னார்.. என்னால அப்பா பேச்சை மறுக்க முடியல.. அப்பாதான் அந்த சாப்பாட்டை முதலில் சாப்பிட்டார்" என்று தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 65 வயதான இவர் ஒரு பில்டிங் கான்டிராக்டர்.

    இவரது மனைவி சுப்பம்மாள் 60, மகன்கள் நாகராஜ் 35, ரவி 30, மகள்கள் முனியம்மாள், ஜோதி, கல்யாணி ஆவார். இதில் எல்லாருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால், மகள்களின் கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கோவிந்தசாமியால் அடைக்க முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் குடும்பமே சிக்கி தவித்தது.

    ஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6!ஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6!

    மருமகள்கள்

    மருமகள்கள்

    இந்த பிரச்சனையில், அவரது 2 மருமகள்களுமே வீட்டை விட்டு அவரவர் அம்மா வீட்டுக்கு போய்விட்டனர். கடன்சுமையில் தவித்த கோவிந்தசாமி, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம், அதாவது 12-ம் தேதி கோவிந்தசாமி, மனைவி, 2 மகன்கள், மகள் கல்யாணி மற்றும் அவருடைய 2 குழந்தைகள் என எல்லோருமே சாப்பாட்டில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

    தகவல்

    தகவல்

    கொஞ்ச நேரத்தில் கல்யாணியின் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் அலறி அடித்து கொண்டு போலீசுக்கு தகவல் சொன்னார். போலீசார் விரைந்து வருவதற்குள்கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் இறந்துவிட்டனர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    கல்யாணி மற்றும் அவரது 2 குழந்தைகள் மட்டும் உயிருக்கு போராடவும் அவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இப்போது கல்யாணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "என் கல்யாணத்துக்குதான் அப்பா கடன் வாங்கினார். வீட்டை அடமானம் வெச்சார்.

    விஷ சாப்பாடு

    விஷ சாப்பாடு

    எங்களால் கடனை கட்ட முடியவில்லை. அதனால தற்கொலை முடிவை எங்களிடம் சொன்னார். யாருக்கு இதுல சம்மதமோ அவங்க சாப்பிடுங்க என்று சொல்லி சாப்பாட்டில் விஷத்தை கலந்தார். அப்படி சொல்லிவிட்டு அப்பாதான் அந்த விஷ சாப்பாட்டை முதலில் சாப்பிட்டார். அப்பா சொல்லி என்னால மறுக்க முடியல.. அதனால நானும் சாப்பிட்டு, அந்த விஷ சாப்பாட்டை என் குழந்தைகளுக்கும் ஊட்டினேன்" என்றார்.

    English summary
    avadi family committed suicide due to debt and daughter confessed to police in the hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X