சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் இரவில் திடீரென வீசிய குளு குளு காற்று! அனல் குறைந்ததால் மகிழ்ச்சியடைந்த மக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Vayu: வாயு புயல்.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை..சென்னைக்கு எப்படி?- வீடியோ

    சென்னை: சென்னையில் நேற்றிரவு திடீரென வீசிய குளு குளு காற்றால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் முதல் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்துவிட்டது.

    கடந்த ஒரு மாதமாக சொல்ல முடியாத அளவுக்கு சென்னை வாசிகளை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலுடன் கடுமையான அனல்காற்றும் வீசி வருகிறது.

    வாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால் வாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால்

    பகல் நேரங்களில் தவிர்ப்பு

    பகல் நேரங்களில் தவிர்ப்பு

    இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். சென்னை மாநகர் முழுவதும் பகல் நேரங்களில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் சாலையில் நடமாடுபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    வெப்பம் தணியும்

    வெப்பம் தணியும்

    இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இதனால் பல இடங்களில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து வருகிறது.

    இரவிலும் புழுக்கம்

    இரவிலும் புழுக்கம்

    ஆனால் சென்னையில் இதுவரை கோடை மழை ஒரு சொட்டுக்கூட பெய்யவில்லை. இதனால் வறண்ட வானிலையும் இரவு நேரங்களிலும் புழுக்கமே நிலவி வருகிறது.

    சென்னையில் சில் சில் காற்று

    சென்னையில் சில் சில் காற்று

    இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் திடீரென குளிர்ச்சியான காற்று வீசியது. இரவு 10 மணிக்கு மேல் வீசிய இந்த பலத்த காற்றால் ஓரளவுக்கு புழுக்கம் குறைந்தது.

    மழை வருமா?

    மழை வருமா?

    திடீரென வீசிய இந்த சில் காற்றால் சென்னை மக்கள் வீட்டின் மாடிகளில் நின்று காற்றை அனுபவித்து மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரத்தில் இந்த காற்றால் சென்னைக்கு மழை வருமா என்றும் எதிர்பார்த்தனர்.

    தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன்

    பல ஆண்டுகளில் மிகவும் குளிர்ச்சியான இரவு என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் கொண்டாடுங்கள் என்றும் கூறியிருந்தார். இரவு 37 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருந்ததாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார்.

    English summary
    Chennai felt Chill breeze last night after 10PM. Tamilnadu weatherman says The most kulu kulu night in years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X