சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை கல்லூரி பேருந்துக்குள் மாணவிக்கும்.. பேராசிரியைக்கும் குடுமிப்பிடிச் சண்டை! என்னங்க நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பேருந்துக்குள் மாணவிக்கும், பேராசிரியைக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி அடையாள அட்டையை கழுத்தில் மாட்ட சொன்னதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக கல்லூரி
நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒழுக்கக்கேடான பாதையில் இளைஞர்கள்

ஒழுக்கக்கேடான பாதையில் இளைஞர்கள்

சமீபகாலமாக, இளைய தலைமுறையினர் மத்தியில் ஒழுக்கம் இல்லாத போக்கை அதிகம்
காண முடிகிறது. பெற்றோர்கள் கொடுக்கும் அதிக செல்லம்; சரி எது தவறு எது எனசொல்லிக்கொடுத்து வளர்க்காதது; தவறாக வழிநடத்தும் திரைப்படங்கள் ஆகியவையே
இதற்கு முழுமுதல் காரணமாக கூறப்படுகிறது. இதனால் "எதுவுமே தவறு இல்லை"என்கிற மனப்பான்மையில் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். குறிப்பாக,பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் பண்பே இன்று பெரும்பாலான பள்ளி, கல்லூரிமாணவர்களிடத்தில் இல்லை. ஆசிரியர்களை எதிர்த்து பேசுவதுதான் 'கெத்து' என்றதவறான புரிதலில் மாணவர்கள் இருக்கின்றனர். இப்படி ஒழுக்கக்கேடாக வளரும்
மாணவர்கள் பிற்காலத்தில் பெரும் இன்னலை சந்திக்க போகிறார்கள் என்பதுமட்டும் உறுதி. அப்படியொரு ஒழுங்கீனமான மாணவி செய்த செயல்தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐடி கார்டு கட்டாயம்

ஐடி கார்டு கட்டாயம்

சென்னையை அடுத்த செம்ஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் அறிவியல் மற்றும்தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் எப்போதும் அடையாள அட்டையை (ஐடி கார்டு) கழுத்தில் மாட்டியிருக்கவேண்டும் என்பது கல்லூரி விதிமுறை. அவ்வாறு ஐடி கார்டு அணியாத
மாணவர்களுக்கு இந்தக் கல்லூரியில் அபராதமும் விதிக்கப்படும்.

ஒருமையில் திட்டிய மாணவி

ஒருமையில் திட்டிய மாணவி

இந்நிலையில், நேற்று இந்தக் கல்லூரிப் பேருந்தில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவி மட்டும் ஐடி கார்டு அணியாமல்
இருந்துள்ளார். இதை கவனித்த பேராசிரியை அந்த மாணவியிடம் ஐடி கார்டு அணியுமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி, "நீ யார் எனக்கு ஆர்டர் போடுவதற்கு, உன் வேலையை பார்.." என ஒருமையில் பேசினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குடுமிப்பிடி சண்டை

குடுமிப்பிடி சண்டை

அப்போது பேராசிரியை அந்த மாணவி கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியையும் மாணவியை அடிக்கிறார். பின்னர் இருவரும்
பேருந்துக்குள்ளேயே ஒருவரின் ஒருவர் முடியை பிடித்து கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதையடுத்து, மாணவர்கள் இருவரையும் விலக்க விட்டனர். இதனிடையே, இந்த மாணவி - பேராசிரியை சண்டையை தங்கள் செல்போனில் வீடியோ
எடுத்த மாணவர்கள், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த மக்கள், அந்த மாணவியை கடுமையாக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மாணவி மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
A fight between a college student and a professor inside a bus as the professor asked student to wear identity card.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X