சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி எல்லா பக்கமும் அணைகட்டுனா எப்படி ஆபிஸ் போறது.. சென்னையில் மக்கள் அவதி

Google Oneindia Tamil News

Recommended Video

    அப்பாடா ஒருவழியா வடகிழக்கு பருவமழை தீவிரமாகிருச்சு டோய் ! TamilNaduWeather update

    சென்னை: சென்னையில் எல்லா பக்கமும் மழை நீர் வெள்ளம் கடுமையாக இருப்பதால் மக்கள் அலுவலகம் செல்வதற்கு கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.

    சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இயல்பாகவே ஓரளவு மழை பெய்தாலே தண்ணீர் அதிகமாகும்போது தாழ்வான சாலைப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும்.

    அந்த வகையில் விடிய விடிய பெய்த மழையால் சென்னையின் பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக சென்னையின்புறநகர் பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    மக்கள் தவிப்பு

    அங்கெல்லாம் வெள்ள நீர் மெதுவாக வடிந்து வருகிறது. இதனால் இன்று காலை அலுவலகம் செல்வதற்காக வாகனங்களை எடுத்த மக்கள் எல்லா பக்கமும் இப்படி தண்ணீராக இருந்தால் எப்படி அலுவலகம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல்

    சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாமே காலை நேரங்களில் பொதுவாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வேளச்சேரி சாலை, ஒஎம்ஆர் சாலை, எனஐடி நிறுவனங்கள் நிறைந்த சாலையில் கடும் போக்கவரத்து நெரிசல் இருக்கும்,. இதேபோல் கிண்டி, வடபழனி சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை தேனாம்பேட்டை சந்திப்பு, கிண்டி, அடையாறு, கோட்டூர்புரம் சந்திப்பு உள்ளிட்டசாலைகளில் கடுமையாக இருக்கிறது.

    வடபழனி சாலை

    இதேபோல் நுங்கம்பாக்கம் சாலை, கோயம்பேடு சாலை, கோடம்பாக்கம் வடபழனி சாலையும் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது. தியாகராய நகர் செல்லும் சாலை சந்திப்பு, அசோக்நகர், கேகேநகர் சந்திப்பு சாலைகள் உள்ளிட்ட சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது.

    மழையை எதிர்கொள்ள

    மழை நீர் வெள்ள நீர் இன்று மாலைக்கு வடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் மக்கள் வெள்ளத்தில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறுவார்கள். இன்றும் மழை தொடரும் பட்சத்தில் மக்கள் மழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டியதுதான்.

    English summary
    chennai flooded for heavy rain: heavy traffic jams in many places, Heavy Damage in the suburbs area
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X