சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோட்டை யாருக்கும் சொந்தமில்லை... மாற்று அரசியலை விரும்பும் மக்கள்...மநீம ரங்கராஜன்!!

Google Oneindia Tamil News

சென்னை: கோட்டை யாருக்கும் சொந்தம் இல்லை. மக்கள் மாற்று அரசியல் கட்சியை விரும்புகின்றனர். மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் எங்களது கட்சியை பலப்படுத்தி வருகிறோம்'' என்று மக்கள் நீதி மய்யத்தின் ரங்கராஜன் ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்தார்.

Recommended Video

    SPECIAL INTERVIEW தென்சென்னை யாருடைய கோட்டையும் இல்லை.. மக்கள் நீதி மையம் ரங்கராஜன் தாக்கு..!

    கொரோனா, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் ரங்கராஜன் தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ''நிறைய இடங்களில் யார் யாருக்கு தொற்று இருக்கிறது என்பதை டிரேசிங் மற்றும் டெஸ்டிங் மற்றும் யாருடன் பழகினார்கள் என்பதை அறியாததால் துவக்கத்தில் தொற்று அதிகமாக பரவியது. தென்சென்னையில் அசோக் நகர் தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் அதிகமாக பரவியது. இன்னும் ஆயிரம் கேஸ்களுக்கு மேல் பதிவாகி வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் சென்னை மாநகராட்சி நன்றாக செயல்பட்டால் கட்டுப்படுத்தலாம் என்பது எங்களுடைய கட்சியின் முடிவு.

    Chennai fort does not belong to anyone People want change says Makkal Needhi Maiam Rangarajan

    தென்சென்னை, சென்னை எல்லாமே திமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். இது ராஜாவின் கோட்டை என்று கூறுவார்கள். இதுவரை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் எவ்வாறு ஆட்சி செய்தது என்பது மக்களுக்கு தெரியும். மாற்று அரசியலை மக்கள் விரும்புகிறார்கள். அப்போது மக்கள் நீதி மய்யத்துக்கு வாய்ப்பு உள்ளது. கட்சியை பலப்படுத்தி வருகிறோம். மேற்பார்வையாளர்களும் போடப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தொகுதிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர். இது ஜனநாயகம். யாருடைய கோட்டையும் இல்லை.

    கூட்டணியா தனித்தா என்பதற்கு எங்களது தலைவர் ஏற்கனவே பதில் கூறி இருக்கிறார். மக்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நலன்தான் முக்கியம். ஒருமித்த கருத்து இருந்தால் சேர்ந்து பயணிப்போம் என்று எங்கள் தலைவர் கூறியுள்ளார். நேர்மை, மக்கள் நலன் எங்களது கொள்கை.

     பிரதமர் நிவாரண நிதியில் சேர்ந்த ரூ. 200 கோடி... எப்படி வந்தது... யார் கொடுத்தது!! பிரதமர் நிவாரண நிதியில் சேர்ந்த ரூ. 200 கோடி... எப்படி வந்தது... யார் கொடுத்தது!!

    கொரோனா காலத்தில் தேர்தல் தேவையா என்றால் ஜனநாயகத்தில் தேர்தல் அவசியம். பீகாரில் தேர்தளை அறிவித்துவிட்டனர். தமிழக தேர்தல் வரும் 2021 மே மாதம் நடக்கவிருக்கிறது. அதற்குள் நிலைமை சீராகும் என்று நம்புவோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் நடத்தித்தான் ஆகவேண்டும். நிலைமை மோசமானால் அப்போது பார்ப்போம். கொரோனா கட்டுப்பாட்டு தேர்தல் நடக்கும் என்று நம்புவோம்'' என்று மக்கள் நீதி மய்யம் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தென்சென்னை எம்பி வேட்பாளராக போட்டியிட்டவர் ரங்கராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai fort does not belong to anyone People want change says Makkal Needhi Maiam Rangarajan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X