சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்

Google Oneindia Tamil News

சென்னை : ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறித்த சென்னை திருவல்லிக்கேணி கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் என கூறி ஆபாச படம் பார்ப்பவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளது இந்த கும்பல். டெல்லி போலீஸ் கொடுத்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு பலரையும் செல்போனுக்குள் மூழ்க வைத்துள்ளது. செல்போனில் வீடியோக்கள் பார்ப்பது தான் பலருக்கும் பொழுதுபோக்காக மாறிவிட்டடது. இந்த சூழலில் பலரும் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்ப்பதும் அதிகரித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இற்த குற்றச் செயல்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை பெரிய அளவில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு சென்னையைச் சேர்ந்த ஒருகும்பல் பணம் பறித்தது வந்துள்ளது.

போலீஸ் பெயரில் மோசடி

போலீஸ் பெயரில் மோசடி

டெல்லி சைபர் க்ரைம் போலீஸார் பெயரில் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸார் அளித்த புகாரின் பணம் பறித்தவர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அவர்ள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருப்பது தெரியவந்தது.

சென்னையில் மோசடி

சென்னையில் மோசடி

இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை மாங்காட்டை சேர்ந்த ராம்குமார், கொளத்தூரை சேர்ந்த கேப்ரியேல் ஜோசப் திருச்சியைச் சேர்ந்த தினோசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்டிதய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மிரட்டினர்

மிரட்டினர்

கைதான 3 பேரும் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களின் ஐபி முகவரியை எடுக்கிறார்கள்.. பின்னர், அதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் போன் போடுகிறார்கள். நாங்கள் டெல்லி சைபர் க்ரைம் போலீஸ், உங்களுடைய செல்போன், லேப்டாப்பிலிருந்து சிறார் வதை வீடியோக்களை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இது வெளியில் தெரிந்தால் அவமானம்.

5000 பறிமுதல்

5000 பறிமுதல்

ஃப்ர்ஸ்ட் டைம் என்கிறதால் 5,000 ரூபா ஃபைன் கட்டுங்கள் மீண்டும் பார்த்தால், கைது செய்வோம் என மூன்று பேரும் மிரட்டுகிறார்கள். அதற்கு பயந்து டெல்லி போலீஸார் எனக்கூறியவர்களிடம் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார்கள். இப்படி இந்த கும்பல் பல லட்சத்தை பறித்திருக்கிறது.

சிக்கினர்

சிக்கினர்

இந்நிலையில் சிலர், உண்மையிலேயே டெல்லி சைபர் க்ரைம் போலீஸா என விசாரித்தபோதுதான் இவர்கள் போலியானவர்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது. உடனடியாக டெல்லி சைபர் க்ரைம் போலீஸாரிடம் அவர்கள் புகார் கொடுத்துள்ளார்கள் அதன் பின்னர் டெல்லி போலீசார் அளித்த புகாரின் பேரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுளளார்கள்.

English summary
Chennai: The gang who extorted money from those who watched adult videos, How did they caught by chennai police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X