சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைவாசிகளே! 6 மாதங்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காதாம்.. கை கொடுத்தது கோடை மழை

Google Oneindia Tamil News

சென்னை: கோடை மழை கை கொடுத்திருப்பதால் சென்னை மாநகரத்தில் 6 மாதங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை இருக்காது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக உச்சத்தில் இருக்கிறது. மாநிலத்திலேயே சென்னையில்தான் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ளது.

Chennai get Good News - Reservoirs get good flow

இதனால் சென்னையில் லாக்டவுன் படுதீவிரமாக அமல்படுத்தப்பட்டும் வருகிறது. வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் சென்னைவாசிகளுக்கு அண்மையில் பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழை ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோடை மழை கொட்டி தீர்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பூண்டி நீர்தேக்கப்பகுதியில் 4.2 மி.மீ மழை பெய்திருக்கிறது. செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் 10 மி.மீ மழை கொட்டியிருக்கிறது.

துர்நாற்றம் வீசும் கழிவறைகள்.. தரமில்லாத உணவு.. அரசு முகாம்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதி துர்நாற்றம் வீசும் கழிவறைகள்.. தரமில்லாத உணவு.. அரசு முகாம்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதி

பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் மொத்தம் 5,800 மில்லியன் கன அடிநீர் உள்ளது. புழல் ஏரியில் 2958 மில்லியன் கன அடிநீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3300 மி. கன அடி). செம்பரம்பாக்கத்தில் 1,956 மில்லியன் கன அடி, பூண்டியில் 3,231 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தற்போதைய கோடை மழை கை கொடுத்திருக்கும் நிலையில் சென்னையில் 6 மாதங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை இருக்காது என்றனர். இதனால் கோடைகாலத்தில் சென்னைவாசிகள் குடிநீருக்கு அலைய வேண்டிய துயரம் இருக்காது என்கின்றனர் அதிகாரிகள்.

Recommended Video

    வேலூரில் மெகா சைஸ் ஆலங்கட்டி மழை.. கொரோனாவை மறந்து மக்கள் மகிழ்ச்சி - வீடியோ

    English summary
    Chennai Reservoirs got good flow due to the Summer Rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X