சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் சூடான பஜ்ஜி சாப்பிடும் நேரம் வந்துவிட்டது... சென்னையில் லேசான மழை

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் கார்மேகம் சூழ்ந்து விட்டு விட்டு மழைபெய்து வருகிறது-வீடியோ

    சென்னை: வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் இன்று காலை லேசான மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகம் காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் அது தாமதமானது.

    இதையடுத்து அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தொடங்கவில்லை. இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் குளிர்ந்த காற்றும் நிலவுகிறது.

    [நடிகர் சிவகுமார் எனக்கு புது செல்போன் வாங்கி தர போறார்.. இளைஞர் மகிழ்ச்சி]

    மேலடுக்கு சுழற்சி

    மேலடுக்கு சுழற்சி

    இது வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டம் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

    பெய்யும்

    பெய்யும்

    இதனால் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்கள், கேரளம், தென் கர்நாடகம் ஆகிய இடங்களில் பெய்யும் என்றார்.

    கொட்டித் தீர்த்த மழை

    கொட்டித் தீர்த்த மழை

    நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அது போல் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து மழை பெய்து வருகிறது.

    மழை

    மழை

    சென்னையின் முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், சேத்துபட்டு உள்ளிட்ட இடங்களில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    English summary
    North east monsoon begins. Moderates rain in Chennai and sub urban areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X