சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா சென்னைக்கு வந்தது சோதனை.. கல்குவாரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

Google Oneindia Tamil News

சென்னை: குன்றத்தூர் அருகே கல் குவாரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்குவதால் இது பாதுகாப்பானது என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் தமிழகத்தில் கோடை காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது. கடந்த ஜனவரி மாதம் முதலே சில குடியிருப்புகளில் லாரி தண்ணீரை வாங்க தொடங்கிவிட்டனர்.

அது மட்டுமல்லாமல் ஜனவரி மாதம் முதலே வெயில் வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் ஒவ்வொரு நீர் நிலைகளாக வறண்டு போகத் தொடங்கின. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் உருவாக இருந்த புயலும் தமிழகத்தை கைவிட்டு ஒடிஸாவை சென்றடைந்தது.

கொளுத்தும் கோடை வெயில்.. குளுகுளு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் கொளுத்தும் கோடை வெயில்.. குளுகுளு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

பஞ்சம்

பஞ்சம்

இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

வேலையை இழக்கும் நிலை

வேலையை இழக்கும் நிலை

சென்னையில் மக்கள் லாரி தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வீடுகளில் இயற்கை உபாதைகளுக்கு லாரி தண்ணீர் என்ற நிலை உள்ளதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். கூலி வேலை செய்பவர்களும் தண்ணீருக்காக தங்கள் வேலையை உதறிவிட்டு லாரிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கல் குவாரிகள்

கல் குவாரிகள்

எனினும் நீர் நிலைகள் வறண்டுவிட்டதால் லாரிகளும் தண்ணீருக்கு எங்கே போகும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் கல் குவாரியிலிருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னை புறநகரில் 300-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன.

தண்ணீர்

தண்ணீர்

இங்கு நிரந்தர மோட்டார் அமைத்து குடிநீர் எடுக்கும் பணிகளை மேற்கொள்ள குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. மொத்தமாக 3000 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளது.

சென்னைக்கு குழாய்

சென்னைக்கு குழாய்

இங்கிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி குன்றத்தூர் அருகே சிக்கராயப்புரம் கல்குவாரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

English summary
Chennai Metro water board receives water from stone quarry in sub urbans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X