சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

23 ஆவது மாடியின் விளிம்பில் சுற்றிய 15வயது சிறுமி.. சென்னையில் ஷாக்.. காரணத்தை கேட்டா மயங்கிடுவீங்க!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 23ஆவது மாடியின் விளிம்பில் 15 வயது சிறுமி சுற்றி வந்த சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த சிறுமியை எதிரில் உள்ள குடியிருப்புவாசிகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Recommended Video

    23 ஆவது மாடியின் விளிம்பில் சுற்றிய 15 வயது சிறுமி.. சென்னையில் ஷாக் சம்பவம் - வீடியோ

    இளம் கன்று பயமறியாது என்பார்கள். மேலும் ஓடும் பாம்பை பிடிக்கும் வயசு என்றும் சிறுவர்கள், சிறுமிகளின் துணிச்சலை ஒப்பிடுவது உண்டு. அந்த வகையில் குழந்தைகள் பாம்புடன் விளையாடுவது, நாயுடன் விளையாடுவது, பாம்பை பிடிப்பது என நாம் செய்திகளில் படித்திருப்போம்.

    Chennai girl roams in the 23rd floor

    ஆனால் சென்னை நாவலூரில் ஒரு சிறுமி, தனது தைரியத்தை நிரூபிக்க ஒரு திகில் நிறைந்த போட்டியை போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நாவலூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் ஒருவரது 15 வயது சிறுமி 23 ஆவது மாடியின் விளிம்பில் நடப்பதை பலர் பார்த்துள்ளனர்.

    அப்போது அந்த குடியிருப்புக்கு எதிர் குடியிருப்பில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தனர். யாருக்கு தைரியம் அதிகம் என 15 வயது சிறுமிக்கும் அவருடைய சகோதரருக்கும் போட்டியாம். இதில் 23 ஆவதுமாடியின் விளிம்பில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காரில் ஏசி கூடாது.. 1+2-வுக்கு மேல் நாட் அலவ்டு.. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான நெறிமுறைகள் வெளியீடுகாரில் ஏசி கூடாது.. 1+2-வுக்கு மேல் நாட் அலவ்டு.. ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான நெறிமுறைகள் வெளியீடு

    தகவலறிந்த அந்த குடியிருப்பின் சங்கத்தினர் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மீது புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    English summary
    Chennai girl roams in the 23rd floor challenging with her brother about guts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X