சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு அளிக்கப்படும் பிரத்யேக உணவுகள் விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் பிரத்யேக உணவுகள் என்னென்ன என்பது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உணவு விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனினும் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 50 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.

    ஓமந்தூரர் அரசினர் தோட்டம்

    ஓமந்தூரர் அரசினர் தோட்டம்

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுககு அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரர் அரசினர் தோட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை (கொரோனா நோயாளிகளுக்கு என்றே பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது), ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

    டாக்டர் சுஜாதா வெங்கடேசன்

    டாக்டர் சுஜாதா வெங்கடேசன்

    இங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உணவுகளை தயாரித்து வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் பிரத்யேக உணவுகள் என்னென்ன என்பது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சுஜாதா வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார்.

    எலுமிச்சை தண்ணீர்

    எலுமிச்சை தண்ணீர்

    இதுபற்றி அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை 7 மணி அளவில் இஞ்சி, தோல் நீக்கப்படாத எலுமிச்சை பழம் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் வழங்கப்படுகிறது. காலை 8 மணி அளவில் சப்பாத்தி, இட்லி , சம்பா கோதுமை உப்புமா, 2 வேகவைத்த முட்டை மற்றும் ஒரு கப் பால் வழங்கப்படுகிறது.

    சப்பாத்தி சம்பார் சாதம்

    சப்பாத்தி சம்பார் சாதம்

    காலை 10.30 மணி அளவில் சாத்துக்குடி ஜுஸ் மதியம் 12 மணி அளவில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சூடு தண்ணீர் வழங்கப்படுகிறது. 1.30 மணி அளவில் மதிய உணவாக சப்பாத்தி, புதினா, தயிர், சம்பார் சாதத்துடன், 2 வகையான பொறியல், மிளகு ரசம், வேகவைத்த மூக்கு கடலை வழங்கப்படுகிறது. மாலை 3 மணி அளவில் மஞ்சள், மிளகு மற்றும் உப்பு கலந்த சுடு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    ரவா கிச்சடி இட்லி

    ரவா கிச்சடி இட்லி

    மாலை 5 மணி அளவில் பருப்பு ரசகம், வேகவைத்த மூக்கு கடலை வழங்கப்படும். இரவு 7.30மணிக்கு ரைஸ், ரவா உப்புமா, இட்லி அல்லது பீன்ஸ் கேரட் ரவா கிச்சடி, சப்பாத்தி அல்லது சேமியா, வெங்காய சட்னி, காய்கறி குருமா, ஒரு கப் பால் வழங்கப்படும். இரவு 9 மணி அளவில் இஞ்சி மற்றும் எலுமிச்சை சூடு தண்ணீரும், இரவு 11 மணி அளவில் மஞ்சள், மிளகு மற்றும் உப்பு கலந்த சுடு தண்ணீரும் வழங்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்ல, கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் பெப்பர் சால்டுடன் 2 வேகவைத்த முட்டை, கீரை சூப் அல்லது மிளகு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதேபோல் கொரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கும் இதே உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகிறது" இவ்வாறு கூறினார்.

    English summary
    coronavirus infected patients food details: chennai govt hospital Nutritionist Dr. Sujatha Venkatesan explain
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X