சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: மேல்முறையீடு பற்றி கேள்வி கேட்ட நிருபர்..! ஆவேசமடைந்த வைகோ !

    சென்னை: தேசதுரோக வழக்கில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட ஹைகோர்ட், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.

    Chennai HC advises Vaiko to think and speak

    இந்த வழக்கில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேசுங்கள் என்றும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைத்தனர்.

    English summary
    Chennai HC advises Vaiko he should think one or two times before he talks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X