சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலகிருஷ்ணரெட்டி வழக்கு.. சரமாரி கேள்வி கேட்ட சென்னை ஹைகோர்ட்.. விழிபிதுங்கிய தமிழக அரசு!

பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்டனை எதிரொலி, அமைச்சர், எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி- வீடியோ

    சென்னை: பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள்.

    1998 ஆம் ஆண்டில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். பஸ் மீது கல்லெறிந்ததாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவருக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பிற்கு எதிராக பாலகிருஷ்ணரெட்டி தரப்பு சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இன்று மிகவும் காரசாரமான வாதங்கள் வைக்கப்பட்டது.

    தீர்ப்பை நிறுத்த வேண்டும்

    தீர்ப்பை நிறுத்த வேண்டும்

    வழக்கின் தொடக்கத்திலேயே தனக்கு எதிராக தரப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணரெட்டி தரப்பு வாதம் செய்தது. தனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை மட்டுமில்லாமல் தீர்ப்பையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது.

    பாலகிருஷ்ணரெட்டியின் பெயர் இல்லை

    பாலகிருஷ்ணரெட்டியின் பெயர் இல்லை

    பாலகிருஷ்ணரெட்டி தரப்பு, எந்த இடத்திலும் பாலகிருஷ்ணரெட்டியின் பெயர் நேரடியாக போலீஸ் எப்ஐஆரில் இல்லை. வாகனத்தை தாக்கியதாக எங்கும் பாலகிருஷ்ணரெட்டி பெயர் இல்லை. அதேபோல் பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிராகவும் யாரும் வாக்குமூலம் அளிக்கவில்லை.

    வாக்குமூலம் இல்லை

    வாக்குமூலம் இல்லை

    இதில் வாக்குமூலம் அளித்த 28 பேரில் ஒருவர் கூட பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை. 108வது பெயராகத்தான் பாலகிருஷ்ணரெட்டி பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. பாலகிருஷ்ணரெட்டி போலீசை எதிர்த்து பேசினார். அதனால் ஆய்வாளர் பாலகிருஷ்ணரெட்டி மீது வழக்கு பதிவு செய்தார். அவர் எங்கும் நேரடியாக தவறு செய்யவில்லை. அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மட்டுமில்லாமல், தீர்ப்பையும் தள்ளி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணரெட்டி தரப்பு கோரிக்கை வைத்தது.

    சரமாரியான கேள்வி

    சரமாரியான கேள்வி

    இந்த வாதத்தை அடுத்து உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. அதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும். தண்டனையை நிறுத்தி வைத்தால் போதாதா? தீர்ப்பையே ஏன் நிறுத்தி வைக்க கேட்கிறீர்கள்?. அரசியல் கட்சியில் இருக்கும் நபர்தான் இது போன்ற வழக்குகளில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். ஆனால் அவரே இப்படி கோரிக்கை வைத்தால் எப்படி?

    அரசு தரப்பு

    அரசு தரப்பு

    அரசு தரப்பு ஏன் பாலகிருஷ்ணரெட்டிக்கு ஆதரவாக பேசுகிறது. அரசு தரப்பு போலீசுக்கு ஆதரவாகத்தானே பேச வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட கூடாது என்பதை தீர்ப்பை நிறுத்த சொல்கிறீர்களா? தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள். அரசு இதில் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது.கீழ்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு என கூறுகிறீர்களா? என்று அரசுத்தரப்புக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

    English summary
    Chennai High Court asks serious questions on Former minister Balakrishna Reddy case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X