சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானத்தின் நிலை என்ன?- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் அவர்கள் 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

Chennai HC asks TN government about the status of 7 tamils release

இந்த நிலையில் தண்டனை காலத்துக்கு மேல் இவர்கள் சிறையில் இருப்பதால் இவர்களை விடுவிடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை! பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை!

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துவிட்டது. இதையடுத்து இவர்களது விடுதலை தொடர்பான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பப்பட்டது.

அந்த தீர்மானம் அனுப்பு ஓராண்டாகியும் இன்னும் அதன் மேல் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி 2012-ஆம் ஆண்டு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் கவர்னரிடம் நிலுவையில் உள்ளதாகவும், தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வார அவகாசம் தேவை எனவும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்று விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

English summary
Chennai HC asks TN government about the status of resolution passed in Assembly for 7 tamils release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X