சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ஒன்னுதான் பாக்கி.. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரைத்தான் நாங்கள் அகற்றவில்லை.. நீதிபதிகள் சரமாரி

Google Oneindia Tamil News

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் பிடெக் முடித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கனடாவில் படிப்பதற்காக தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.

ஆமா.. நான் முஸ்லீம்தான்.. இது என் நாடு.. என்னங்கடா சந்தேகம் உங்களுக்கு.. வெளுத்தெடுத்த குஷ்புஆமா.. நான் முஸ்லீம்தான்.. இது என் நாடு.. என்னங்கடா சந்தேகம் உங்களுக்கு.. வெளுத்தெடுத்த குஷ்பு

தண்ணீர் லாரி

தண்ணீர் லாரி

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கரணைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அவர் மீது பேனர் சரிந்து நிலைத்தடுமாறி விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

மருத்துவமனை

மருத்துவமனை

இது தொடர்பாக லாரி டிரைவரும், பேனர் அடித்த அச்சக உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த பேனரை வைக்கக் கூறிய முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி என கூறிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எடுக்கவில்லை

எடுக்கவில்லை

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயகோபால் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர் ஜெயகோபால் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால்தான் அவர் மீது நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.

ஜெயகோபால்

ஜெயகோபால்

சட்டவிரோதமாக ஜெயகோபால் பேனர் வைத்த நிலையில் அவர் மீது காவல் துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரை அகற்றும் பணியை மட்டும்தான் நீதிபதிகள் செய்யவில்லை. மற்றபடி அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளோம் என்றார். அப்போது விரைவில் ஜெயகோபாலை கைது செய்வோம் என தமிழக அரசு பதில் அளித்தது.

English summary
Chennai HC judges getting angry for not taking action against Jayagopal in banner issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X