சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக காவல்துறை மீது கிரிமினல் வழக்கு எடுக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Chennai Girl Subashree lost her life due to illegal Banners

    சென்னை: சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Chennai HC asks why criminal case not registered against Police officials in Subhashree

    இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த மனு தொடர்பாக நாளை மறுதினம் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    English summary
    Chennai HC asks why criminal case not registered against Police officials and corporation officials in SubhaShree death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X