சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர் கர்ணன். இவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

Chennai HC asks Why Retired Judge Karnan not arrested till?

இதனால் கர்ணன் மீது தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவுஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இனிமேல் வீடியோ வெளியிட மாட்டேன் என அவர் உறுதியளித்தார்.

இந்த விளக்கத்தை கேட்ட நீதிமன்றம் கர்ணனை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து டிஜிபி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ஆம் தேதி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
Chennai HC asks Why Retired Judge Karnan not arrested till? Today this case has come for hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X