சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி இன்று பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை கொலிஜீயம் பரிந்துரைத்ததன் பேரில் மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Chennai HC Chief justice Amreshwar Pratap Sahi took oath in Rajbhavan

இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாகவும் சுதந்திர இந்தியாவின் 30-ஆவது தலைமை நீதிபதியாகவும் ஏபி சாஹி இன்று பதவியேற்று கொண்டார்.

 எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்! எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர், சபாநாயகர் தனபால், சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம், மற்ற துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர் 1985-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இதையடுத்து 2005-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 2018-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் பாட்னா தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1959-ஆம் ஆண்டு பிறந்தார் சாஹி.

English summary
Chennai HC Chief justice Amreshwar Pratap Sahi took oath in Rajbhavan. Chief minister Edappadi Palanisamy, Ministers were participated in the oath ceremony function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X