சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசால் போடபட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற கோரிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு தொடர்ந்த மனுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Chennai HC condemns Vijayakanth in defamation case

இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுவை திரும்பப் திரும்பப் பெறக்கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

இதையடுத்து, மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி! டைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி!

மேலும், எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது எனவும் மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

English summary
Chennai HC condemns Vijayakant in defamation case filed by ADMK government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X