சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவதூறு வழக்கு: முதல்வர் ஸ்டாலினை ஆஜராகுமாறு நிர்பந்திப்பதா?. சிறப்பு கோர்ட்டுக்கு டோஸ் விட்ட ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: அவதூறு வழக்குகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

இதுவரை இல்லாத சாதனை.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று.. இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இதுவரை இல்லாத சாதனை.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று.. இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

அவதூறு வழக்குகள்

அவதூறு வழக்குகள்

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தற்போதையை தமிழ்நாடு முதல்வரும், அப்போதைய தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டுகள் கூறியதாக 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது.

 திரும்பப்பெறப்படும்

திரும்பப்பெறப்படும்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப்பெறப்படும் என அறிவித்தது. இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்ப பெறும் முன்னர் சம்மந்தபட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

 அரசாணை தாக்கல்

அரசாணை தாக்கல்

அந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 17 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தற்போது தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடபட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின்க்கு எதிராக நிலுவையில் உள்ள 17 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யபட்டது.

நிர்பந்திக்க கூடாது

நிர்பந்திக்க கூடாது

அப்போது நீதிபதி நிர்மல்குமார் வழக்குகள் தொடர்பான விபரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு ( எம்.பி, எம்.எல்.ஏ எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்) என தெரிவித்தார். மேலும் இந்த மனு மீது அடுத்த மாதம் 8-ம் ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் என கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

English summary
Chennai High Court has directed the special court not to compel Tamil Nadu Chief Minister MK Stalin to appear in person in defamation cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X