சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற ஜெ.வின் சில சொத்துகளை ஏன் ஏழைகளுக்கு வழங்க கூடாது?.. நீதிபதி

Google Oneindia Tamil News

சென்னை: மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் சில சொத்துகளை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா இறந்தவுடன் அவர் அபராதமாக நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய ரூ 100 கோடியை அவரது சொத்தை விற்று எடுத்துக் கொள்ள நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துகளை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஜெயலலிதாவின் சொத்துகளில் உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அண்ணன் வாரிசுகள்

அண்ணன் வாரிசுகள்

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகும்படி, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்குக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

மனுதாரர்

மனுதாரர்

அதன்படி இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாம் நிலை வாரிசுகள் இருந்தாலும், நிர்வாகியை நியமிக்கலாம் என வாதிட்டார்.

பயன்பாடு

பயன்பாடு

தொடர்ந்து நீதிபதிகள், புகழேந்தி வழக்கு தொடர்ந்த பிறகு, நீதிமன்றத்தை நாடியது ஏன்? மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்திருந்ததால், தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இறுதி சடங்கில்

இறுதி சடங்கில்

ஜெயலலிதாவின் சொத்துக்களில் சில பகுதிகளை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை எனவும், தன்னை அனுமதிக்காததால் தான், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும் தீபா பதிலளித்தார்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

தொடர்ந்து நீதிபதிகளிடம் முறையிட்ட தீபா, போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

அனுமதி

அனுமதி

இதையடுத்து, சட்டப்பூர்வ வாரிசுகளை அனுமதிக்காதது ஏன் என நீதிபதிகள் கேட்டதற்கு, இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் போயஸ் தோட்ட இல்லத்துக்கு தீபா, தீபக் ஆகியோர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சொத்துகளை நிர்வகிப்பது யார் என்பது குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

English summary
Why cant we give some of the assets of Jayalalitha to poor people? asks Chennai HC judge Kribakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X