சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கிய ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன்

Google Oneindia Tamil News

Recommended Video

    3 பேரை வெளுத்து வாங்கிய நீதிபதி வைத்தியநாதன்- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா தொடர்பான ஒரே தீர்ப்பில் 3 பேரை வெளுத்து வாங்கினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்.

    பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்று கூறி கொண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்.

    ஆரம்ப காலத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து ஏன் டிஎன்ஏ பரிசோதனை செய்யக் கூடாது என்று அதிரடி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அம்ருதா விவகாரத்தில் அதே நீதிபதி வைத்தியநாதன் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.

    [ அவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு? ]

    நம்பிக்கை

    நம்பிக்கை

    அவர் தனது தீர்ப்பின்போது கூறுகையில் புராணங்களின்படி, இறந்தவர்களுக்கும் அந்தரங்க உரிமை உள்ளது. அவர்களது ஆத்மாவை தொந்தரவு செய்யக்கூடாது. மரணத்துக்கு பின்னரும் அவர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    நிர்வாகம்

    நிர்வாகம்

    அதேசமயம், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தையும் தீபக் மற்றும் தீபாவின் நோக்கத்தையும் கடுமையாக கண்டித்துள்ளார் நீதிபதி வைத்தியநாதன். சினிமா வில்லன் போல் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், உடற்பயிற்சி செய்தார் என கட்டுக் கதைகளை அப்பல்லோ நிர்வாகம் சொல்லியதாக கூறியிருந்தார்.

    சொத்தின் மீதே கவனம்

    சொத்தின் மீதே கவனம்

    மேலும் அம்ருதா போல் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீபாவும் தீபக்கும் கோரவில்லை. ஏனெனில் அவர்களது நோக்கம் ஜெயலலிதாவின் சொத்தின் மீதே இருக்கிறது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    இதுபோல் தமிழக அரசையும் நீதிபதி விமர்சனம் செய்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் மரணத்தில் இறுதி வரை மர்மம் விலகவே இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

    பார்க்க வேண்டும்

    பார்க்க வேண்டும்

    நீதிபதியே கூறி விட்டார், ஜெயலலிதாவின் மரண மர்மம் இன்னும் நீங்கவில்லை என்று. இனியாவது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Chennai HC Judge Vaidyanathan condemns TN government, Apollo Hospital and Deepa- Deepak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X