சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி!

Google Oneindia Tamil News

சென்னை: கூகுள் இணையத்தால் சுமார் 1,00,000 பதில்களை கொண்டு வர முடியும். ஆனால் ஒரு நூலகரால் அதில் சரியான ஒன்றை கொண்டு வர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பொது நூலக இயக்கத்தை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக நூலகத்துறை, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

chennai HC judge has said Google can bring 1,00,000 answers, but a librarian can bring the right one

தமிழகத்தில் உள்ள நூலகங்களை மேம்படுத்துவது குறித்தும், நூலகங்களை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு சொல்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி எம்.தண்டபானி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெருகிவரும் டிஜிட்டல் உலகில் பொது நூலகங்களின் முக்கியத்துவத்தை நாம் இழக்க முடியாது. கூகுள் இணையத்தால் சுமார் 1,00,000 பதில்களை கொண்டு வர முடியும் என்றாலும், ஒரு நூலகரால் அதில் சரியான ஒன்றை கொண்டு வர முடியும். எனவே தமிழகத்தில் பொது நூலகத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வது மிக அவசியமாகிறது.

புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்! புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்!

எனவே தமிழ்நாட்டில் பொது நூலக இயக்கத்தை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக நூலகத்துறை, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மாநிலத்தில் உள்ள நூலகங்கள் விவரங்கள், அவற்றில் உள்ள காலியிடங்கள், நூலத்தில் உள்ள டிஜிட்டல் பயன்பாடு உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

English summary
A Chennai High Court judge said Google Internet can bring about 100,000 responses. But a librarian could come up with the right one
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X