சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்து மகா சபை கூட்டம் குறித்து கோவை போலீஸுக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: அகில பாரத இந்து மகாசபை சார்பில் நடத்தப்படவுள்ள அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு ஜனவரி 23க்குள் முடிவெடுக்க கோவை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சிவானந்தா காலனியில் ஜனவரி 25ஆம் தேதி அகில பாரத இந்து மகா சபை சார்பில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தேசிய தலைவர் சக்கரபாணி மகாராஜ், தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai HC orders Police department on All India Hindu Maha sabhas plea

இந்நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கோரி ரத்னபுரி காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது
இந்த மனு தொடர்பாக இதுவரை எந்த பரிசீலனை செய்யாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில பாரத இந்து மகாசபையின் இளைஞர் அணி தலைவர் சுபாஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

அந்த மனுவில் காவல்துறையிடம் கொடுத்த மனு மீது இதுவரை எந்த பரிசீலனை செய்யவில்லை தன்னுடைய மனு மீது உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்

ஒலிபெருக்கி அனுமதி பெற்று, கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் அனுமதி கோரிய விண்ணப்பத்தை காவல்துறையினர் இன்னும் முடிவெடுக்காததால், மனுவை ஏற்று கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை, சட்டத்திற்கு பரிசீலித்து ஜனவரி 23ஆம் தேதிக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

English summary
Chennai HC orders Coimbatore Police department to take some decision about All india Hindu Mahasabha's rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X