சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நங்கநல்லூர் இளைஞர் மீது தாக்குதல்.. கேகே நகர் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை என்ன?.. ஹைகோர்ட் கேள்வி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: விசாரணைக்காக அழைத்துச் சென்று இளைஞரை தாக்கிய சென்னை கே.கே.நகர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக டிஜிபி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த பி.ஆகாஷ் என்ற இளைஞரை விபத்து வழக்கு விசாரணைக்காக ஜனவரி 10-ஆம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தினர் விபத்து வழக்கு விசாரணை என கூறி அழைத்து சென்றுள்ளனர்.

Chennai HC orders Tamilnadu DGP to about action taken on KK Nagar Inspector

அங்கிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் முகமது நாசர் மற்றும் நான்கு காவலர்கள் சேர்ந்து ஆகாஷின் தோழி குறித்தும், ரவிபிரசாத் என்பவர் குறித்தும் விவரம் கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன், வெற்று காகிதங்களில் கையெழுத்தை வாங்கி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், தன்னை தாக்கிய கே.கே. நகர் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட கோரி ஆகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் - சீமான்தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் - சீமான்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தமிழக டி.ஜி.பி.-யும், கே.கே.நகர் ஆய்வாளரும் பதில் மனு தாக்கல் செய்ய
உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

English summary
Chennai HC orders Tamilnadu DGP to reply what is the action taken against KK Nagar Inspector who attacks a youth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X