சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிறிஸ்துவ திருமணங்கள் பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    கிறிஸ்துவ திருமண பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

    சென்னை: கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும் படி தமிழக பதிவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ‌தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புக்களும், பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்துவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

    Chennai HC orders Tamilnadu Registrar department to reply for Christians marriage

    இந்த திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்ககோரி பதிவு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வேலூரை சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    ‌இந்த மனுவில் கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை மறுப்பதாகவும் இது தொடர்பாக பதிவுத் துறைக்கு மனு கொடுத்தும் இந்த மனு மீது எந்த பதிலும் தெரிவிக்காததால் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்

    ‌இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஷேஷாசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    ‌கிறிஸ்தவர்களுக்கு நடத்தபட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனை பதிவு செய்வது இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

    இதையடுத்து நீதிபதிகள் மனுவிற்கு டிசம்பர் 6 தேதிக்கு பதிலளிக்கும் படி,தமிழக பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    English summary
    Chennai HC orders Tamilnadu Registrar department to reply on the plea filed on registering marriages of Christians done by Bishops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X