சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் அனுமதியின்றி பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் கூடாது- ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சி கோவிலில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு- வீடியோ

    சென்னை: எங்களிடம் தெரிவிக்காமல் பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள கோயில்களில் விலை மதிப்புள்ள சிலைகள் காணாமல் போயின. இதை சிலை கடத்தல் தடுப்பு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீட்டு வந்தனர்.

     Chennai HC orders TN that it should not take any action against Pon Manickkavel

    இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக தீனதயாளன் கைது செய்யப்பட்டு அவரது வீட்டிலிருந்து ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல் சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டிலும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி 60-க்கும் மேற்பட்ட சிலைகளை கண்டறிந்தனர்.

    சிலை கடத்தல் விவகாரத்தில் இத்தகைய முனைப்புடன் செயல்பட்டு வரும் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்கு தொடர திட்டமிட்டிருந்தது.இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டில் தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

    அப்போது நீதிபதிகள் கூறுகையில் பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    English summary
    Chennai HC orders Tamilnadu Government that it should not take action against Pon Manickavel without informing to court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X