சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறபடுத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 50 கோடி ரூபாய் செலவில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சரியாக பராமரிக்கபடவில்லை என சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆடிட்டர் வந்தனா ஷக்காரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Chennai HC orders to remove two wheelers opposite to NSC bose road

அந்த மனுவில் மாநகராட்சி நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கபட்டுள்ளதாலும்,வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதாலும்,மின்சார பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாலும் பாதசாரிகள் பாதிப்புக்குள்ளாவதால் நடைபாதைகளை சரியாக பராமரிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைப்பதிருப்பதாக கூறிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி நாளை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

English summary
Chennai HC orders to remove two wheelers opposite to NSC bose road and also it directs Corporation to submit the report on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X