சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோசடி புகாரில் முகாந்திரம் இருக்கே.. வழக்கை ஏன் சந்திக்ககூடாது.. செந்தில் பாலாஜிக்கு ஹைகோர்ட் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: செந்தில் பாலாஜி குறித்த, என்னைக்கோ நடந்த விவகாரத்தை கிண்டி கிளறி எடுத்துள்ளது சென்னை ஐகோர்ட்! மோசடி வழக்கில் முகாந்திரம் இருந்தால், செந்தில் பாலாஜி ஏன் வழக்கை சந்திக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

2011-2015 -ம் ஆண்டு காலக்கட்டத்தில்தான் செந்தில்பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோசடி புகார் எழுந்தது.

Chennai HC questioned, Why should DMK MLA Senthil Balaji do not face the case

அரசு போக்குவரத்து கழகத்தில் 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி சொன்னதாகவும், இதற்காக 95 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் ஏமாற்றி விட்டதாக, அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. பறிக்கப்பட்ட ராகுல் காந்தி வசிக்கும் பங்களா? காலி என அறிவிப்பு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. பறிக்கப்பட்ட ராகுல் காந்தி வசிக்கும் பங்களா? காலி என அறிவிப்பு

இது சம்பந்தமான விசாரணைதான் இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டில் முகாந்திரம் உள்ள நிலையில், செந்தில் பாலாஜி ஏன் வழக்கை சந்திக்க கூடாது? என்று ஐகோர்ட் நேரிடையாக கேள்வியை கேட்டுள்ளது. இது சம்பந்தமாகவும் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டு, வழக்கையும் தள்ளி வைத்துள்ளது.

மலை போல செந்தில் பாலாஜியை திமுக நம்பி உள்ள நிலையில், செந்தில் பாலாஜி கோர்டுக்கு என்ன பதில் சொல்ல போகிறார், வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

English summary
Chennai High Court has raised questioned, "Why not Senthil Balaji face the case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X