சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமியாருக்கு விசா பிரச்சினை.. பரோலை அக்.15 வரை நீட்டிக்க நளினி கோரிக்கை.. ஹைகோர்ட் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    Rajiv Gandhi Case | வேலூர் சிறையிலிருந்து பரோலில் வந்தார் நளினி - வீடியோ

    சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் வந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    லேண்டர் தரையிறங்கியது.. இஸ்ரோவுடனான துண்டிப்பு கட்டானது எப்போது?.. பரபர தகவல்கள்லேண்டர் தரையிறங்கியது.. இஸ்ரோவுடனான துண்டிப்பு கட்டானது எப்போது?.. பரபர தகவல்கள்

    அக்.15

    அக்.15

    வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மனுவில்

    மனுவில்

    இது சம்பந்தமாக அனுப்பிய கோரிக்கை மனுவை அரசு நிராகரித்து விட்டதாகவும் நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

    பரோல் நீட்டிப்பு

    பரோல் நீட்டிப்பு

    ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருகின்றனர் எனக் கூறி, பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மறுப்பு

    மறுப்பு

    முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போதும் நீட்டிப்பு வழங்க கோருகிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என, பரோல் நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் மறுத்தனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    English summary
    Chennai HC refused to extend Nalini's parole period to Oct 15 as her mother in law has visa issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X