சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசுக்கான தடையை நீக்க கோரிக்கை.. அதிமுக வழக்கறிஞர் மனுவை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசுக்கான தடையை நீக்கக் கோரிக்கை விடுத்து அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனின் முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Chennai HC rejected ADMK Advocates plea to quash the ban on Pongal gift

இந்நிலையில் பெரும்பாலான மக்கள் ரூ. 1000-த்தை வாங்கிவிட்டனர். கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையாத நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துவிட்டனர். இதனால் நேற்று முதல் வெள்ளை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் பொங்கல் பரிசை நிறைய பேர் வாங்கி விட்டதால் அதன் மீதான தடையை நீக்குமாறு கேட்டார்.

அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கை தொடர என்ன ஆவணங்கள் உள்ளன.
வழக்கு தொடர என்ன தகுதி உள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அதிமுக வழக்கறிஞரின் மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

English summary
Chennai HC rejected the plea to quash the ban on Pongal gift to all the Ration card holders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X