சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் கொலை வழக்கு.. 7 தமிழர்கள் விடுதலை கோரும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர்: விரைவில் நளினிக்கு பரோல்..! வழக்கறிஞர் புகழேந்தி தகவல்...

    சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். அப்போது அவர் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    Chennai HC rejects plea seeking 7 tamils release

    இந்த தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு இதுவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது 7 பேரை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    English summary
    Chennai High Court rejects Rajiv Gandhi Convict Nalini's plea seeking 7 tamils release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X