சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால் ஆலையை மூடுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் பலியாகிவிட்டனர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது.

கிருஷ்ணர் குறித்து அவதூறு... கி.வீரமணிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல... ஐகோர்ட் கிருஷ்ணர் குறித்து அவதூறு... கி.வீரமணிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல... ஐகோர்ட்

ஓய்வு பெற்ற நீதிபதி

ஓய்வு பெற்ற நீதிபதி

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி தருண்அகர்வால் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

தடை

தடை

அந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

நிராகரிப்பு

நிராகரிப்பு

வழக்கை சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்து சந்திக்க வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வேதாந்தா நிறுவனம் முன் வைத்து அதை நிராகரித்தது.

இன்று உயர்நீதிமன்றம் விசாரணை

இன்று உயர்நீதிமன்றம் விசாரணை

இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக இந்த ஆலையை திறக்க மீண்டும் அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கையை மீண்டும் நிராகரித்தனர். ஸ்டெர்லைட் வழக்கை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

English summary
Chennai HC rejects the plea of Vedanta to open the Sterlite for maintenance purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X