சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி எம்பி தேர்தல் வழக்கு.. இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க உதவுங்கள்.. ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Chennai HC seeks help from all to complete Tuticorin MP election case

இந்த நிலையில் இந்த வழக்கானது எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு இன்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது,தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையரை விடுவிக்க கோரியும், தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தபட்ட மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வேறு தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் விடுவிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.

இந்த மனுக்களுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி மனுதாரர் சந்தானகுமார்,எம்.பி.கனிமொழிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
மேலும்,எம்.பி. - எம்.எல்.ஏக்களுக்கான பதவிகாலம் முடிந்த பின்பு தான் தேர்தல் வழக்கில் முடிவு காணப்படும் என்ற பொது கருத்து நிலவுவதாக கூறிய நீதிபதி, தூத்துக்குடி தேர்தல் வழக்கை இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க நீதிமன்றத்திற்கு உதவும்படி அனைத்து தரப்பிற்கும் அறிவுறுத்தி, நவம்பர் 14ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வமான வாதம் உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அக்.29-ம் தேதியை குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்துடுக... தமிமுன் அன்சாரி கோரிக்கைஅக்.29-ம் தேதியை குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்துடுக... தமிமுன் அன்சாரி கோரிக்கை

English summary
Chennai Highcourt seeks help to complete the case of Tuticorin MP election case.Written arguments to be submitted before November 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X